கோவை கார் வெடிப்பு ; கைதான 5 பேர் வீட்டில் போலீசார் சோதனை

Coimbatore Tamil Nadu Police
By Thahir Oct 28, 2022 06:18 AM GMT
Report

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். 

கார் வெடிப்பு சம்பவம்

பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் அஃப்சர் கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Coimbatore car explosion; The police raided the house of the 5 arrested

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

டிஜிபி ஆலோசனை 

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை சென்ற தமிழக டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை உயர்அதிகாரிகளுடன் நேற்று  ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும். இச்சம்வம் குறித்து ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

கைதானவர்கள் வீடுகளில் போலீசார் விசாரணை 

இந்த நிலையில், கைதான 6 பேர்களில் ஒருவரான ஃபெரோஸ்கான் இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு குற்றவாளி முகமது அசாருதீனை கேரள சிறையில் சந்தித்து பேசியதாக போலீசிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் அவரவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

Coimbatore car explosion; The police raided the house of the 5 arrested

இந்த வழக்கு தொடர்பாக கோவையில் முகாமிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.