கோவை கார் வெடிப்பு சம்பவம்; நெல்லையில் ஒருவரிடம் விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் முகமது உசேன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் ஒருவரிடம் விசாரணை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் நெல்லை மேலப்பாளையத்தில் முகமது உசேன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமது உசேன் இஸ்லாமிய மத குரு என்றும் அவர் மதரசா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாகவும், அவருக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.