கோவை கார் வெடிப்பு சம்பவம்; NIA விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு உத்தரவு
கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் அஃப்சர் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.