கோவை கார் வெடிப்பு சம்பவம் - முபீன் உயிரிழப்பு குறித்து வெளியான தகவல்
கோவை கார் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் NIA விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என் கேட்டிருந்தார்.
இதையடுத்து மத்திய அரசு NIA விசாரணைக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கார் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில், ஜமேஷா முபின் உடல் முழுவதும் 2 இன்ஞ் ஆணிகள் துளைத்ததாகவும், இடது புறத்தில் உள்ள இதயத்தை ஒரு ஆணி துளைத்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.