கோவை கார் வெடிப்பு; ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து 109 பொருட்கள் பறிமுதல்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில் 109 பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
கார் வெடிப்பு சம்பவம்
கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார்.
பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் அஃப்சர் கான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையிர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமை விசாரணை தேவை என கூறியிருந்த நிலையில் மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவையில் முகாமிட்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
109 பொருட்கள் பறிமுதல்
தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், கோவை கார் சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த முதல் தகவல் அறிக்கையில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக நேற்று பகல் 1 மணி அளவில் முறைப்படி புகார் வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், சிவப்பு பாஸ்பரஸ், 2 மீட்டர் நீளம் உள்ள திரி, கண்ணாடி துகள்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆணிகள், மத ரீதியிலான புத்தகங்கள், பேட்டரி உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கார் வெடிப்பில் உடல் கருகி உயிரிழந்த ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கின் முக்கியத்துவம் கருதி தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த வழக்கை கையில் எடுத்திருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.