பாஜக பந்த் அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

Coimbatore Chennai Madras High Court
By Thahir Oct 28, 2022 07:28 AM GMT
Report

கோவையில் வரும் 31 ஆம் தேதி பாஜக நடத்த உள்ள பந்த் சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார் வெடிப்பு சம்பவம்

கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார்.

பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் அஃப்சர் கான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையிர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமை விசாரணை தேவை என கூறியிருந்த நிலையில் மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.மேலும் கோவை மாநகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு 

இந்த நிலையில் கோவையில் பாஜக சார்பில் வரும் 31ம் தேதி பந்த் நடத்த பாஜக திட்டமிட்டு அழைப்பு விடுத்துள்ளது.

பாஜக பந்த் அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கு - உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை | Coimbatore Bjp Shop Closed Protest Hc Case

இதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். இது கடைகளை மூடக்கோரி பாஜக மிரட்டுவதாகவும் எனக் கூறி கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.