ஆ.ராசாவை விமர்சித்த கோவை பாஜக தலைவர் கைது
திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவை விமர்ச்சித்து பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆ.ராசா பேச்சு
திமுக துணை பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கடந்த 5ம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்து மதத்தை சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதாக கூறப்பட்டது.
இது குறித்து பாஜக தரப்பில் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

உத்தமராமசாமி கைது
அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் ஆ.ராசாவுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்நிலையில் திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார் .
கடந்த சில நாட்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ. ராசாவை மிரட்டும் வகையில் அவர் பேசியிருந்தார். உத்தம ராமசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.