பந்தயத்தில் வேடிக்கை பார்த்த சேவலுக்கு ரூ.1.25 கோடி பரிசு - வைரல் வீடியோ
சண்டையிடாமல் வேடிக்கை பார்த்த சேவல் ரூ.1.25 கோடி பரிசு வென்றுள்ளது.
சேவல் சண்டை
பொங்கல் காலங்களில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற பல்வேறு பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சேவல் சண்டை நடந்த நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஆந்திராவில் நடத்தப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா, என்டிஆர், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட சேவல் சண்டை நடைபெற்றது. சுமார் 2000 கோடி அளவில் பந்தயம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ரூ.1.25 கோடி பரிசு
இதில், மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளியில் நடந்த சேவல் சண்டை போட்டியில் ஒரு சேவல் வேடிக்கை பார்த்த ரூ.1.25 கோடி பரிசு பெற்றுள்ளது.
இந்தப் பந்தயத்தில் வளையத்துக்குள் போட்டியிட்ட 5 சேவல்களில் 4 சேவல்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மயக்கமடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது. 4 சேவல்கள் வெளியேறியதும், சண்டையிடாமல் நின்ற நெமலி புஞ்சு என்பவரின் சேவல், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ரூ.1.25 கோடி பரிசையும் வென்றது.
గొడవలు జరుగుతున్నప్పుడు సైలెంట్గా ఉండడం కన్నా మేలైన మార్గం ఇంకోటి ఉండదు..
— Swathi Reddy (@Swathireddytdp) January 15, 2025
కాలు కదపకుండా ఐదు కోళ్ల పందెం గెలిచిన పుంజు...#cockfight #sankranthi pic.twitter.com/ihp0c97J1o
சண்டையிடாமலே சேவல் ரூ.1.25 கோடி பரிசு வென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.