மேயரிடம் சிக்கிய ரூ.9 கோடி மதிப்புள்ள மர்ம பை - திறந்து பார்த்த போது அதிகாரிகள் அதிர்ச்சி!
குடும்பத்தினருடன் மீன் பிடிக்க சென்ற அமெரிக்க மேயர் ஒருவரிடம் மர்ம பை ஒன்று சிக்கியுள்ளது.
கொக்கைன்
கடந்த ஜூலை 23 அன்று புளோரிடா மாகாணத்தில் உள்ள தாம்பாவின் மேயர் ஜேன் காஸ்டர் தனது குடும்பத்தினருடன் மீன் பிடி பயணத்தை மேற்கொண்டார். அப்போது பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு தண்ணீரில் மிதந்து வந்த பை ஒன்று அவர்களிடம் சிக்கியுள்ளது. அதனை தம்பாவின் காவல்துறை அதிகாரிகளிடம் மேயர் ஒப்படைத்தார்.
அந்த பை பல அடுக்கு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டிருந்தது. திறந்து பார்த்தபோது அதில் இருப்பது கொக்கைன் என்று தெரியவந்துள்ளது. 70 பவுண்ட் கோக்கைன் இருந்துள்ளது அதன் மதிப்பு 1.1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடிக்கும் மேல்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பின்னர் மியாமி செக்டருக்குப் பொறுப்பான தலைமை எல்லைக் காவல் ஏஜென்ட் வால்டர் ஸ்லோசர் 'மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை அவரது ஏஜென்ட்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றியதாக ஒரு அறிக்கையை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவு
அந்த பதிவில் '"வார இறுதியில், மியாமி செக்டரில் உள்ள பார்டர் ரோந்து முகவர்கள் 70 பவுண்டுகள் கோகோயினைக் கைப்பற்றினர், இது புளோரிடா கீஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு படகோட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு தோராயமாக $1.1 மில்லியன்" என்று ஏஜென்ட் வால்டர் ஸ்லோசர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Over the weekend, Border Patrol agents in the Miami Sector seized 70 lbs. of cocaine that was discovered by a recreational boater in the #FloridaKeys. The drugs have an estimated street value of approx. $1.1 million dollars. #miami #florida #drugbust #Mondaymorning pic.twitter.com/etaiuwXrcK
— Chief Patrol Agent Walter N. Slosar (@USBPChiefMIP) July 24, 2023