கூட்டணி ஆட்சிக்கு ”NO" முதலமைச்சர் அதிரடி- காங்கிரஸ் உடனடி பதில்

M K Stalin
By Fathima Feb 11, 2026 07:29 AM GMT
Report

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தவுடனேயே தமிழக காங்கிரஸ் தலைவர் பதிலளித்துள்ளார்.

சென்னையில் India Today Roundtableல் கலந்து கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும், கூட்டணி ஆட்சி ஒத்துவராது.

2021ம் ஆண்டை விட மிக எளிதாக வெற்றிபெற்றுவிடுவோம், முன்பு சாதனைகளை சொல்லிவந்தோம், தற்போது ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறோம் என தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சிக்கு ”NO" முதலமைச்சர் அதிரடி- காங்கிரஸ் உடனடி பதில் | Coalition Rule Is Not Suitable For Tn

காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பதாக தகவல்கள் வெளியான நிலையில், முதலமைச்சரின் இந்த பதில் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்ந்து வலுவாக உள்ளது. மீண்டும் வெற்றி பெறுவோம், திமுக அரசே தொடரும் என மக்கள் சான்றிதழ் வழங்கிவிட்டனர்.

நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை, 22ம் தேதி திட்டமிடப்பட்ட கூட்டணி பேச்சுவார்தைகள் முடிந்துவிடும் என தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சிக்கு ”NO" முதலமைச்சர் அதிரடி- காங்கிரஸ் உடனடி பதில் | Coalition Rule Is Not Suitable For Tn