சம்சாரம் இல்லாமல் வாழலாம்...மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது - ஜி.கே.மணி..!

Speech Shortage Assembly Coal Members Smile GKMani
By Thahir Apr 18, 2022 07:12 AM GMT
Report

தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை தொடங்கியது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஜி,கே.மணி மின்சாரம் துண்டிப்பு தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.

சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என தனது கேள்வியை தொடங்கினார்.

அப்போது சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.அதைத் தொடர்ந்து பேசிய அவர், கோடைக்காலம் என்பதால் தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு ஏற்படும் நிலை, கோடை காலத்தில் மின் பயன்பாட்டின் தேவையும் அதிகரிக்கிறது,

இனி வெயில் காலம் என்பதால் முழு நாளும் மின்விசிறி ஓட வேண்டும். மின்வெட்டு ஏற்பட்டால் குழந்தைகள் படிக்க முடியாது,விவசாயம் தொழில் எல்லாம் பாதிப்பு.

மின்வெட்டு முழுமையாக வரவில்லை என்றாலும்,ஆங்காங்கே மின்வெட்டு பரவலாக தொடங்கி இருக்கிற நிலை, இதற்கு காரணம் நிலக்கரி பற்றாக்குறை என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு மின் உற்பத்திக்கு குறைவாக உள்ளதாக பரவலாக சொல்லப்படுகிறது என்றார். தமிழக அரசு தேவையான நிலக்கரியை கையிருப்பில் வைத்துள்ளதா?இந்திய அளவில் நிலக்கரி பற்றாக்குறை என்ற சூழல் நிலவி இருக்கிறது.

மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கு,மின் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று அரசின் கவனத்தை ஈர்பதாக கூறினார்.