இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரிப்பு - இனி கரண்ட் கட் ஆக அதிக வாய்ப்பு வெளியான பகீர் தகவல்

India Power Cut Coal
By Thahir Oct 10, 2021 07:51 AM GMT
Report

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம், நிலக்கரி வாயிலாக இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரிப்பு - இனி கரண்ட் கட் ஆக அதிக வாய்ப்பு வெளியான பகீர் தகவல் | Coal India Power Cut

நாடு முழுதும் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, போதிய நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தி குறைந்து உள்ளது.

இதனால் மின் தடையை சந்திக்க நேரிடும் நிலையில் உள்ளதாக டெல்லி, தமிழ்நாடு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் கூறியுள்ளன.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுவிட்டது.

பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 முதல் 4 மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏப்ரல் மாதம் முதல் பெய்த மழையின் காரணமாக நிலக்கரிச் சுரங்கங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி இல்லாத நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றாலும் கடந்த சில வாரங்களில் நிலக்கரியின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், உலகம் முழுவதுமே நிலக்கரியின் தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளதுதான். கொரோனா காலகட்டத்தில் மின்தேவை குறைந்து பல அனல் மின் ஆலைகள் உற்பத்தியை குறைத்தன.

ஆனால், இப்போது கொரோனாவிலிருந்து மீண்டு வருவதால், உலகம் முழுவதுமே மின் தேவை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

இன்னும் சில நாட்களில் நிலைமை விரைவில் சீரடையும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.