வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர்... - டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தர்ணா..!
வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது குற்றச்சாட்டு வைத்து தர்ணாவில் ஈடுபட்ட வீரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் மல்யுத்த வீரர்கள் தர்ணா
இன்று டெல்லியில் திடீரென வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்த வீரர் பஜ்ரங் பூனியா.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா செய்தியாளர்கள் பேசுகையில்,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் காணப்படும் சர்வாதிகார போக்கை, மல்யுத்த வீரர்கள் சகித்து கொள்ள விரும்பவில்லை. மல்யுத்த பயிற்சியாளர்கள் பெண்களை துன்புறுத்துகின்றனர். மேலும் கூட்டமைப்பிற்கு பிடித்த சில பயிற்சியாளர்கள் பெண் பயிற்சியாளர்களிடமும் தவறாக நடந்து கொள்கின்றனர்.
சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். அவர்கள் (கூட்டமைப்பு) எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு எங்களை தொந்தரவு செய்கிறார்கள். நம்மைச் சுரண்டுகிறார்கள். நாங்கள் ஒலிம்பிக் போட்டிக்கு சென்றபோது, எங்களிடம் பிசியோ அல்லது பயிற்சியாளர் இல்லை.
நாங்கள் குரல் எழுப்பியதால், நாங்கள் அச்சுறுத்தப்படுகிறோம். மல்யுத்த விளையாட்டு என்றால் என்னவென்று கூட தெரியாதவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். எங்களுக்கு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றனர்.

They (federation) interfere in our personal lives as well and bother us. They are exploiting us. When we went to olympics, we didn't have physio or a coach. Since we've raised our voices, we are being threatened, say wrestlers at Jantar Mantar pic.twitter.com/980MkmIvhp
— ANI (@ANI) January 18, 2023