“ஹர்திக் பாண்ட்யா வீணாய் போவார்” - கடுமையாக எச்சரித்த பயிற்சியாளர்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யாவை விராட் கோலியின் இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. அந்த அணியில் காயம் காரணமாக இந்திய அணியின் வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டதில் இருந்து பந்துவீச முடியாமல் தவித்து வந்த நிலையில் கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளிலும் பந்து வீசவில்லை.
இரண்டாவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பந்துவீசி 2 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். அடுத்து ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளுக்கு எதராக ஒருசில ஓவர்களை மட்டுமே வீசினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பந்து வீசவில்லை. இது ரசிகர்களிடையே பல சந்தேகங்களை கிளப்பியது.
இதனிடையே சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா டி20 உலகக் கோப்பையின்போது தான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சேர்க்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த பேச்சு தேவையில்லாத ஒன்று என்றும், இப்படியே பேசினால் அவர் எதிர்காலம் வீணாய் போகும் என்றும் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா எச்சரித்துள்ளார்.