நகைக்கடன் கிராமிற்கு ரூ.10,000 ஆக உயர்வு; கூட்டுறவு வங்கி அறிவிப்பு

Tamil nadu Gold
By Karthikraja Oct 05, 2026 01:44 PM GMT
Report

tamilnadu co operative banks to give gold loan 10000 per gram: தமிழ்நாட்டின் கூட்டுறவு வங்கிகளில், வழங்கப்படும் நகைக்கடனின் உச்சவரம்பு கிராமிற்கு ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமிற்கு ரூ.10,000 நகைக்கடன்

தமிழ்நாட்டில் மொத்தம் 22,793 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், கூட்டுறவுச் சங்க பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் 10,368 சங்கங்கள் உள்ளன.

தனியார் வங்கிகளை போல் இந்த கூட்டுறவு வங்கிகளிலும் பொதுமக்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து கடன் ;பெற்று வந்தனர். 

நகைக்கடன் கிராமிற்கு ரூ.10,000 ஆக உயர்வு; கூட்டுறவு வங்கி அறிவிப்பு | Co Operative Banks To Give Rs 10000 Loan Per Gram

இந்த கூட்டுறவு வங்கிகளில் கிராமிற்கு அதிகபட்சமாக ரூ.7,000 மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது.

மேலும், கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12 சதவீத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அக்டோபர் 5, 2026 நடைபெற்ற முக்கிய கூட்டத்தொடரில் நகைக் கடன்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு கிராமிற்கு ரூ.7,000 ஆக இருந்த நகைக்கடன் வரம்பு, தற்போது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், நகைக்கடனுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதம், அதன் கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் லாப வரம்பு (Margin) 2.25%க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்போது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.