இது ஈடுசெய்ய இயலாத இழப்பாகும் : வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

M K Stalin Vadivelu
By Irumporai Jan 19, 2023 06:08 AM GMT
Report

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

 வடிவேலு தாயர் மரணம்

அவரது மறைவுக்குசினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் இரங்கல் 

வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் வடிவேலுவின் தயார் சரோஜினி அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஒரு மகனை ஆளாக்கி அழகு பார்த்த தாயாரின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்.

வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது தெரிவித்துள்ளார்.