அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்தவன் நான் : முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
கோவையில் ரூ 662.50 கோடியில் 748 புதிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார் .
கோவை மக்களின் அன்பு
15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5- வது முறையாக வந்துள்ளேன் எனக் கூறினார். கோவை மக்கள் மீது நான் வைத்துள்ள அன்பின் அடையாளமே எனது வருகைக்கு காரணம் என்று கூறினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து பேசிய முதலமைச்சர் தனக்கென ஒரு இலக்கை அமைத்து அதை செயல்படுத்திவருபவர் எனக் கூறினார். மேலும் கணகில்லாமல் நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்துவருவதாகவும் பன்னாட்டு விமான நிலையம் விரிவாக்க திட்டம் கோவைமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய திட்டம் என்று கூறினார்.
நான் கம்பீரமாக சொல்கிறேன்
கோவையில் இதுவரை ரூ.1200 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்ன் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார் தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்கள் கவனித்துவருவதாக கூறிய முதலமைச்சர்என்ன செய்தோம் என்று கேட்பவர்களுக்கு இங்கு நான் கம்பீரமாக சொல்கிறேன், ஏதோ சிலருக்கு உதவுவிகளை செய்து கணக்கு காடுபவர்கள் நாங்கள் அல்ல , மக்களுக்கு கணக்கில்லா உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் தன்மானம், இனமானம் என்னவென்றே தெரியாத கூட்டம்தான் இன்று திமுக அரசை விமர்சிக்கிறது; நான் அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை. திட்டங்களை நிறைவேற்றவில்லை என பொத்தாம் பொதுவாக விமர்சிக்கின்றனர், திமுக ஆட்சி என்ன செய்தது என்பதை தமிழநாட்டு மக்களிடம் கேளுங்கள் எனக் கூறினார்.
விமர்சனத்தில் வளர்ந்தவன் நான்
மேலும் எதிர்ப்பு, அடக்குமுறைகளை மீறி விமர்சனத்தில் வளர்ந்தவன் நான்; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன்; சொந்த கட்சியின் குளறுபடிகளை மறைக்க திமுக ஆட்சியை விமர்சிக்கின்றனர்; ஓராண்டில் ஓராயிரம் திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம், என பேசினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல அனைத்து கட்சிஎம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன் .
இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.ஆனால் அவர்கள் இத்திட்டத்திற்கு பாராட்டவில்லையே என்று நான் நினைக்க மாட்டேன்; அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல எனக் கூறினார்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan