கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இயக்குநர் சுசீந்திரன் ரூ.5 லட்சம் நிதியுதவி!

Udayanidhi Tamilnadu Dmk Cmo
By Thahir Jun 20, 2021 09:24 AM GMT
Report

கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்ததால் பொதுமக்களும் அனைத்து துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில்,திரை பிரபலங்கள் இயக்குநர் முருகதாஸ்,லிங்குசாமி, ஷங்கர், அஜித்,விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பலர் நிதியுதவி அளித்திருந்தனர்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக  முதல்வர் நிவாரண நிதிக்கு இயக்குநர் சுசீந்திரன் ரூ.5 லட்சம் நிதியுதவி! | Cmo Tamilnadu Udayanidhi

இதனையடுத்து, இயக்குநர் சுசீந்திரன் ஆன்லைனில் நடிப்பு மற்றும் இயக்கம் பயிற்சி கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் முழு வருவாயையும் தமிழக அரசின் கொரோனா முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதாக அறிவித்திருந்தார். அதனை தொடந்து ஆன்லைனில் நடிப்பு மற்றும் இயக்கம் பயிற்சி அளித்து அதன்மூலம் வந்த மொத்த கட்டணத்தொகை 5 லட்சம் ரூபாயை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.