தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் - செல்வபெருந்தகை புகழராம்

Mk Stalin Tamilnadu Periyar CMo
By Thahir Sep 07, 2021 04:43 AM GMT
Report

தாடி வைக்காத, தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை புகழ்ந்து கூறியுள்ளார்.

பெரியாரின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாட உள்ள நிலையில், இனிமேல் பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் - செல்வபெருந்தகை புகழராம் | Cmo Tamilnadu Mkstalin Periyar

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், சமூக நீதிப் பேரவைக்கு பெரியார் அளித்த அடித்தளமே காரணம் எனவும், பெரியார் யாரும் எழுத தயங்கியதை எழுதியவர், யாரும் பேச தயங்கியதை பேசியவர்.

தமிழருக்கு எதிரான அனைத்தையும் எதிரியாக கொண்டு செயல்பட்டவர் பெரியார் எனவே, இனி பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வபெருந்தகை அவர்கள் பேசும் பொழுது, பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக கொண்டாட அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த பெரியார் தற்போது இல்லாவிட்டாலும் தாடி வைக்காத, தாடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.