ஒளிப்பதிவு மசோதா திரும்பபெற முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்துள்ளதை அடுத்து தமிழ் திரையுலகினர் பலரும் அவர்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா, கார்த்தி, விஷால், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், ராஜூமுருகன், பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைத்தளத்தில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். அந்த வகையில், நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை திரையுலக பிரபலங்களான கார்த்தி, ரோகிணி உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறுவதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு தமிழக அரசு உதவி செய்ய முன் வருவதாகவும், முதல்வர் உறுதி அளித்ததாகவும் நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஒளிப்பதிவு திருத்த
சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தில் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று, இந்த மசோதா மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்
இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.