வைரமுத்துவை வாழ்த்திய முதல்வர் - பாலியல் குற்றவாளிகளை கொண்டாடுகிறார்கள், சின்மயி ஆவேசம்!

M K Stalin Vairamuthu Chinmayi
By Vinothini Jul 13, 2023 11:11 AM GMT
Report

தமிழக முதல்வர் கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தியததை குறிப்பிட்டு பாடகி சின்மயி ஆவேசமாக டுவீட் செய்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து

கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி தனது டுவிட்டர் பக்கத்தில் இவரை நேரில் சந்தித்து வாழ்த்திய புகைப்படத்தை பதிவிட்டு

cm-wishes-vairamuthu-and-chinmayi-expressed-anger

"கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே!. உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!" என்று டுவீட் செய்துள்ளார்.

கடுப்பான சின்மயி

இந்நிலையில், இந்த பதிவினை கண்டு கடுப்பான பாடகி சின்மயி பதில் டுவீட் செய்துள்ளார். அதில் இவர், "பாலியல் கொடுமைக்கு பல பெண்களை ஆளாக்கிய ஒரு நபரின் பிறந்தநாளுக்கு முதல்வர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பல விருதுகள் பெற்ற பாடகி, டப்பிங் கலைஞரான நான், மீடூ இயக்கத்தின் பெயரில் இதே நபர் மீது பாலியல் புகார் தெரிவித்தேன்.

cm-wishes-vairamuthu-and-chinmayi-expressed-anger

ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பணியாற்ற முடியாத வகையில் பல்வேறு தடைகளை எதிர் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, பல ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த இந்த கவிஞர் எந்த பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அரசியல்வாதிகளுடன் குறிப்பாக திமுகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தால் பல பெண்களை அவர் மிரட்டியுள்ளார்.


பத்ம விருதுகள், சாகித்ய அகாடமி விருது, பல தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்த மனுஷனுக்கு இருக்கும் சக்திதான் இது. ஒரு பெண்ணுக்கு பாலியல் குற்றம் நடந்தால் ஏன் அதை முன் பேசவில்லை என்று கேட்கிறார்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்புக்காக பேசுவதாக கூறுவது அவமானம். இந்த மண்ணில் ஒரு அற்புதமான கலாச்சாரம் உள்ளது, அதுதான் பாலியல் மன்னிப்பு கலாச்சாரம்.

பாலியல் குற்றவாளிகளை இந்த மண்ணில் தான் கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எதிராக பேசும் பெண்களை துன்புறுத்துகிறார்கள், பிரிஜ்பூஷண் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் இவர்கள் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்" என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.