இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் தின வாழ்த்து!

wishes cm stalin bakrid
By Anupriyamkumaresan Jul 21, 2021 05:22 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை இதயபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்" என்ற உயரிய கோட்பாடுகள் இரண்டும் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் தின வாழ்த்து! | Cm Wishes Bakrid For Muslim Peoples

மேலும் கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.