கிருஷ்ண ஜெயந்தி: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

Vijay
By Fathima Sep 04, 2026 03:56 AM GMT
Report

CM Vijay Krishna Jeyanthi Wishes: கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளபதிவில், அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அநீதிக்கு எதிரான அறம்வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கை பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.