தமிழ்நாடு நாளை அரசு கொண்டாடும்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பதிவில், தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றும் வகையில் மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ஆம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வரின் வாழ்த்து பதிவு
மேலும், மெட்ராஸ் மாநிலம் உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் "தமிழ்நாடு" என்ற பெயரை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் அரசு கொண்டாடும் என தெரிவித்துள்ளார்.
தமிழின் இனிமை, தமிழரின் உயரிய பண்பாடு மற்றும் மனிதநேய மரபு தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்க வாழ்த்தியுள்ள முதலமைச்சர், சமத்துவம், சமூகநீதி, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் திறன்மிகு மனிதவளத்தில் முன்னேறும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்க உறுதியேற்போம் என்றும், தமிழ்நாடு உருவாக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.