மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணீரை துடைத்து விட்டு உறுதியளித்த முதல்வர் விஜய்

Vijay Pudukkottai
By Karthikraja Nov 02, 2026 09:18 AM GMT
Report

cm vijay wipes women tears in pudukkottai: கண்ணீருடன் கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணீரை துடைத்து விட்ட முதல்வர் விஜய், கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்

புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு அரசு  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று தனி விமானம் மூலம் திருச்சி சென்றார். 

மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணீரை துடைத்து விட்டு உறுதியளித்த முதல்வர் விஜய் | Cm Vijay Wipes Women Tears In Pudukkottai

அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்ற அவருக்கு, பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். 

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அங்கு அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய பயிர் வகைகளின் கண்காட்சி, மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் சுயதொழில்கள் தொடர்பான அரங்குகளை பார்வையிட்ட அவர் அங்கிருந்த விவசாயிகளிடம் கலந்துரடியாடினார். 

மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணீரை துடைத்து விட்டு உறுதியளித்த முதல்வர் விஜய் | Cm Vijay Wipes Women Tears In Pudukkottai

புதுக்கோட்டையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். 

மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணீரை துடைத்து விட்டு உறுதியளித்த முதல்வர் விஜய் | Cm Vijay Wipes Women Tears In Pudukkottai

பெண்ணின் கண்ணீரை துடைத்த முதல்வர் விஜய்

104 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவிகள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணீரை துடைத்து விட்டு உறுதியளித்த முதல்வர் விஜய் | Cm Vijay Wipes Women Tears In Pudukkottai

இதனிடையே அங்கிருந்த மாற்றுத்திறனாளி பெண் கண்ணீருடன் அளித்த கோரிக்கை மனுவை வாங்கிய முதல்வர் விஜய், அவரின் கண்ணீரை துடைத்து விட்டு கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினார். 

மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணீரை துடைத்து விட்டு உறுதியளித்த முதல்வர் விஜய் | Cm Vijay Wipes Women Tears In Pudukkottai

தானும், தனது சகோதரரும் மாற்றுத்திறனாளிகள், தனது சகோதரரின் மனைவி இறந்துவிட்டதால் இரு குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறார். 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவருக்கு ஏதாவது வேலை வழங்கினால் குடும்பத்தை கவனித்து கொள்வார் என தெரிவித்துள்ளார்.