திருச்சிக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய்

TVK
By Fathima May 30, 2026 11:39 AM GMT
Report

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது.

108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

திருச்சிக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய் | Cm Vijay Will Visit In Trichy

தனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.

இதற்காக நாளை 1ம் தேதி திருச்சிக்கு வருகை தந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

மாலை 4 மணிக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய்க்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி மைதானம் வரை வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் திருச்சி வருகை தரவுள்ளதால், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  

திருச்சிக்கு வருகை தரும் முதலமைச்சர் விஜய் | Cm Vijay Will Visit In Trichy