ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு - முதல்வர் விஜய் எச்சரிக்கை
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான 2வது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் எச்சரிக்கை
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய அமைச்சர்கள் கவனமாக செயல்பட வேண்டும். அதிகாரிகளின் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தேவையில்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து இடையூறு ஏற்படுத்தக்கூடாது.
அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. கட்சியினருக்கும் இது குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.
ஊழல் முறைகேடு புகாரில் சிக்கினால், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும்.
நமது அரசு ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடாத வெளிப்படைத் தன்மை கொண்ட அரசாக செயல்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழருக்கு எதுவுமே கிடைக்காது : அடித்துக்கூறுகிறார் விக்னேஸ்வரன் IBC Tamil