முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பெரம்பூரில் விஜய்

Vijay TVK
By Yashini Jul 13, 2026 10:36 AM GMT
Report

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், முதல்வராக பதவியேற்ற பிறகு இன்று முதல் முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருக்கிறார்.

பெரம்பூரில் முதல்வர்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அரசுப் பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், இதுவரை தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு செல்லவில்லை.

இன்று தான் முதன்முறையாக தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு முதல்வர் விஜய் சென்றிருக்கிறார்.

பெரம்பூர் மக்களின் குறைகளை பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள புதிய மொபைல் செயலியையும் முதல்வர் அறிமுகப்படுத்துகிறார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பெரம்பூரில் விஜய் | Cm Vijay Visits Perambur Mla Office Inauguration

புதிய குடும்ப அட்டை விண்ணப்பதாரர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன.

பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அருகிலுள்ள நியாய விலைக் கடைகளையும் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.

எம்எல்ஏ அலுவலக திறப்பு விழா

இதனைதொடர்ந்து பெரம்பூரில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார் .   

சென்னை வியாசர்பாடி சரமா நகர் முதல் தெருவில் அமைந்துள்ள பெரம்பூர்  எம்எல்ஏ அலுவலகத்தில் புதுப்பிப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பெரம்பூரில் விஜய் | Cm Vijay Visits Perambur Mla Office Inauguration     

பழைய கட்டடம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் சுற்றுச்சுவர், சிசிடிவி கேமராக்கள், முதல்வருக்கான தனி அறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தொகுதி மக்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற அலுவலகத்தில் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.