தொடர் சர்ச்சை: இன்று விஜய் தலைமையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம்

C Joseph Vijay
By Fathima Nov 11, 2026 04:26 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது, இந்நிலையில் மாநிலத்தில் கொலை, கொள்ளை, வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றனர்.

மேலும் ஆளும்கட்சி எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகளும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தொடர் சர்ச்சை: இன்று விஜய் தலைமையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் | Cm Vijay Tvk Mlas Meeting Today

துறையூர் எம்எல்ஏ-வும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் கோரிக்கைகளுடன் வந்த நபரை தாக்கியதாக வீடியோ வெளியானது, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இன்று தவெக தலைமை அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கூட்டத்தில் தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.