தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.., முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

Vijay Tamil nadu
By Yashini Sep 28, 2026 07:38 AM GMT
Report

Cm vijay today launches thaimaman gold ring scheme- அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தவெக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.

தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்த திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.., முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார் | Cm Vijay Today Launches Thaimaman Gold Ring Scheme

இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்திருக்க வேண்டும்.

பிரசவிக்கும் கர்ப்பிணிகள் PICME மற்றும் RCH-IDல் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரமாக ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.., முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார் | Cm Vijay Today Launches Thaimaman Gold Ring Scheme

இந்த திட்டத்தின் கீழ் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் தங்க மோதிரம் வழங்கப்படும்.

முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை, மூன்றாவது குழந்தை என எண்ணிக்கை அடிப்படையில் எந்த கட்டுப்பாடும் இல்லை.

தங்க மோதிரம் பெறுவதற்காக பொதுமக்கள் ஆன்லைன் அல்லது நேரில் விண்ணப்பம் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 107 விநியோக மையங்கள் மூலம் மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.