சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய்
cm vijay to visit swiss in jan 2027 to attend davos meet: முதல்வர் விஜய் அடுத்த ஆண்டு ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்து செல்ல உள்ள முதல்வர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த வாரம் தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்று வந்தார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.
தற்போது, முதல்வர் விஜய் அடுத்த வெளிநாட்டு பயணமாக சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 18 முதல் 22 வரை சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-க்ளோஸ்டர்ஸில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் அலோயிஸ் ஸ்விங்கி மற்றும் நிர்வாக இயக்குநர் மருன் கைரூஸ் ஆகியோர் முதல்வர் விஜய்க்கு விடுத்துள்ள அழைப்பைத் தொடர்ந்து இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையிலான குழு , ஒன்றுக்கு மேற்பட்ட முறை தமிழ்நாடு சார்பில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.