மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் முதல்வர் விஜய்

Vijay Madurai Madurai Meenakshi Temple
By Karthikraja Sep 26, 2026 01:41 PM GMT
Report

cm vijay to visit madurai meenakshi temple: நாளை மறுநாள் மதுரை செல்லும் முதல்வர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.

மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நாளை மறுநாள்(28.09.2026) மதுரையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் முதல்வர் விஜய் | Cm Vijay To Visit Madurai Meenakshi Temple Sep 28

இதற்காக, நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் விஜய், நண்பகல் 12.30 மணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து, ரூ.10.15 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்க உள்ளார்.

அதன் பின்னர், மாலை 4;30 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். 

மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் முதல்வர் விஜய் | Cm Vijay To Visit Madurai Meenakshi Temple Sep 28

மாலை 5;30 மணிக்கு மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட உள்ளார்.

ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் விஜய் முதல்முறையாக மதுரைக்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.