ஆந்திராவிற்கு செல்லும் முதலமைச்சர் விஜய்

Vijay Pawan Kalyan Andhra Pradesh N. Chandrababu Naidu
By Karthikraja Oct 10, 2026 02:08 PM GMT
Report

cm vijay to visit andhra pradesh on october 13: தமிழ்நாடு முதல்வர் விஜய், அக்டோபர் 13 ஆம் தேதி ஆந்திராவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவிற்கு செல்லும் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி ஆந்திராவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திராவிற்கு செல்லும் முதலமைச்சர் விஜய் | Cm Vijay To Visit Andhra Pradesh On October 13

இந்த பயணத்தின் போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது, நதிநீர் இணைப்பு மற்றும் இரு மாநிலங்களுக்கும் இடையான கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளார்.

ஆந்திராவிற்கு செல்லும் முதலமைச்சர் விஜய் | Cm Vijay To Visit Andhra Pradesh On October 13

தெலுங்கு கங்கை திட்டத்தின்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீரின் அளவு வெறும் 2.251 டி.எம்.சி. மட்டுமே எனக் கூறப்படுகிறது. 

மேலும், விஜயவாடாவில் நடைபெறவுள்ள 'Vijayawada Utsav 2.0' நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.