முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதலமைச்சர் விஜய்
மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.
மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல்வர் விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், தவெக தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

இதனையடுத்து, இன்று முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டசபை நிகழ்வுகள் முடிந்த பின்னர், மதியம் 2;30 மணிக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, முதலமைச்சர் விஜய் மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதைதொடர்ந்து, 3;30 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமவளவனையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்த பின்னர், கம்யூனிஸ்ட் சென்று நன்றி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, நேற்று முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பெரியார் திடலுக்கு சென்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்து பேசினார்.