ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார்

Vijay Chennai
By Karthikraja Oct 14, 2026 05:26 AM GMT
Report

சென்னையின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.3,108 கோடி மதிப்பிலான ‘ரிங் மெயின் சிஸ்டம்’ திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் விஜய்

சென்னையில் சீரான குடிநீர் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரிங் மெயின் சிஸ்டம் (RMS) திட்டத்தைச் செயல்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்தார். 

ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் | Cm Vijay To Lay Foundation Stone For Water Project

இந்த திட்டடத்தில்,ஏரிகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட சென்னைக்கான ஒன்பது நீர் ஆதாரங்களும் ஒருங்கிணைக்கப்படும்.

இதன் மூலம், ஏதேனும் ஒரு நீர் ஆதாரத்தில் பிரச்னை அல்லது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது கூட, ஒட்டுமொத்தக் கிடைப்பளவின் அடிப்படையில் அனைத்து நீர் விநியோக மையங்களுக்கும் குடிநீரைச் சீராக விநியோகிக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளைச் சுற்றி 98 கிலோமீட்டர் நீளத்திற்குத் துருப்பிடிக்காத தன்மை கொண்ட குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியோடு சேர்த்து ரூ.3,108 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

சோழிங்கநல்லூரில், இன்று மாலை 4 மணிக்கு முதல்வர் விஜய் இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.