தமிழ்நாட்டில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று தொடக்கம்!

Vijay Tamil nadu TVK
By Vinoja Jun 09, 2026 06:06 AM GMT
Report

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிக்கிறார்.

கடந்த மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்தத் திட்டம் கடந்த 29ஆம் தேதி தொடங்கப்படவிருந்த நிலையில், சில காரணங்களால் விழா ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று தொடக்கம்! | Cm Vijay To Launch Singappen Force Today

இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படவுள்ள இந்த அதிரடிப்படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ இன்று தொடக்கம்! | Cm Vijay To Launch Singappen Force Today

மேலும், இந்தப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு காவல் ஆய்வாளர்கள், எட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 20 காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.