மழைநீர் சேகரிப்பு அமைத்தால் சிறப்பு மானியம் - முதலமைச்சர் விஜய் திட்டம்

Vijay Tamil nadu
By Karthikraja Oct 21, 2026 01:15 PM GMT
Report

 cm vijay to launch rainwater harvesting campaign: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று ‘மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மழைநீர் சேகரிப்பு திட்டம்

2001 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ‘மழை நீர் சேகரிப்புத் திட்டம்’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். 

மழைநீர் சேகரிப்பு அமைத்தால் சிறப்பு மானியம் - முதலமைச்சர் விஜய் திட்டம் | Cm Vijay To Launch Rainwater Harvesting Campaign

இதன்படி புதிதாகக் கட்டப்படும் வீடுகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

இந்தத் திட்டம் மிகத்தீவிரமாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டபோது சென்னையைச் சுற்றிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. அப்போதைய ஆட்சி முடிவடைந்த பின்னர், அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீண்டும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை கையில் எடுக்க உள்ளார்.

மழைநீர் சேகரிப்பு அமைத்தால் சிறப்பு மானியம்

பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை எளிய முறையில் உணர்த்துவதற்காக, சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சுமார் 800 சதுர அடியில் ஒரு முன்மாதிரி வீடு கட்டப்பட்டுள்ளது.

இந்த மாதிரி இல்லத்தை, முதலமைச்சர் விஜய் இன்று மாலை ஆய்வு செய்து திறந்து வைக்க உள்ளார். 

மழைநீர் சேகரிப்பு அமைத்தால் சிறப்பு மானியம் - முதலமைச்சர் விஜய் திட்டம் | Cm Vijay To Launch Rainwater Harvesting Campaign

இந்த வீட்டில் வீட்டின் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல் முழுமையாகச் சேகரிக்கும் பிரத்யேகக் குழாய் கட்டமைப்பு, சேகரிக்கப்பட்ட தண்ணீரை மணல், ஜல்லி மற்றும் வலை ஆகியவற்றைப் பயன்படுத்தி தூய்மைப்படுத்தும் நவீனசுத்திகரிக்கப்பு அமைப்பு, சுத்திகரிக்கப்பட்ட தூய மழைநீரை நேரடியாக ஆழ்துளைக் கிணறு மற்றும் நிலத்தடி நீர் மட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் கட்டமைப்பு ஆகியவை உள்ளது.

எந்தவொரு சாதாரண எளிய குடும்பமும் தங்களது வீட்டில் மிகக் குறைந்த செலவில் அமைக்கக்கூடிய வகையில் இந்த மாதிரி இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை திறந்து வைத்த பின்னர், "ஒவ்வொரு துளி நீரும் - நம் எதிர்காலம்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கட்டாய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும்.

புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்களது கட்டிட வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தினால், அவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் சிறப்பு மானியம் வழங்கப்படும்.