சர்ச்சைகளில் சிக்கும் தவெக எம்.எல்.ஏ.க்கள்; அவசர கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 10, 2026 05:22 AM GMT
Report

cm vijay to conduct tvk mlas meet on november 11: தவெக எம்.எல்.ஏ.க்கள் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் சூழலில், சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நாளை தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள தவெக, 6 மாத கால ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. 

சர்ச்சைகளில் சிக்கும் தவெக எம்.எல்.ஏ.க்கள்; அவசர கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய் | Cm Vijay To Conduct Tvk Mla S Meet On November 11

அதுமட்டுமல்லாது, தவெக எம்.எல்.ஏ.க்களும் சமீபகாலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தவறாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், நேற்று குடிநீர் குறித்து புகார் அளிக்க வந்தவரை, துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் தாக்கியதோடு, குடும்பத்தோடு கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ.க்களின் அவசர கூட்டம் சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.

தவெக எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக சென்னைக்கு வருமாறு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், மக்களிடம் நன்மதிப்பை பெறும் வகையில் எம்எல்ஏக்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் விஜய் எச்சரிக்கை உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.