தாராபுரத்தில் இன்று முதல்வர் விஜய் பிரச்சாரம் - 5,000 பேருக்கு மட்டும் அனுமதி

Vijay Tiruppur Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Sep 30, 2026 05:13 AM GMT
Report

cm vijay to campaign in dharapuram: தாராபுரத்தில் இன்று முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார்.

இதனால் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக சத்தியபாமா போட்டியிடுகிறார். 

தாராபுரத்தில் இன்று முதல்வர் விஜய் பிரச்சாரம் - 5,000 பேருக்கு மட்டும் அனுமதி | Cm Vijay To Campaign In Dharapuram

தவெக, திமுக, அதிமுக, நாம்தமிழர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனைப்போட்டி நிலவும் நிலையில், சத்தியபாமாவை ஆதரித்து தமிழக முதல்வர் விஜய் இன்று தாராபுரத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள சித்ராவுத்தன்பாளையத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டதிற்கு 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, சென்னையில் இருந்து இன்று மதியம் தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு 3 மனிக்கு வருகை தர உள்ளார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க QR Code உடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்கும் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது.

முதல்வர் வருவதால் திருப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ரம்யாபாரதி தலைமையில் 3000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுப்பட்டுள்ளனர்.