டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க வயது கட்டுப்பாடு - முதல்வர் விஜய் அதிரடி
தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் இருந்தால் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை சரிபார்த்து மதுபானம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, டாஸ்மாக் விவகாரத்தில் அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பெரிதும் கவனம் பெற்று வருகிறது.
அதாவது, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதும் விஜய், தமிழகம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.
இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானங்களை விற்க தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.
மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
மதுபானம் வாங்க வருபவர்கள் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை காட்டச் சொல்லி உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.