அரசியல் முக்கியத்துவம் பெறும் விஜய்யின் இரண்டாவது டெல்லி பயணம் - இந்த முறை என்ன திட்டம்?
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், மூன்று நாள் பயணமாக ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அவரது இந்தப் பயணம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, விஜய் ஏற்கனவே மே 27 ஆம் தேதி முதன்முறையாக டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் மறுநாளே சென்னை திரும்பினார்.

அந்தப் பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு வழங்கப்படாதது பேசுபொருளானது.
இந்நிலையில், டெல்லியில் ஜூன் 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் (NITI Aayog) கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜூன் 10 ஆம் தேதி காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்படுகிறார். மேலும், கடந்த பயணத்தின் போது சந்திக்காத குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை இந்த முறை முதலமைச்சர் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் காரணமாகவே இந்த முறை அவரது டெல்லி பயணம் மூன்று நாட்களாக திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பயணத்தை நிறைவு செய்து ஜூன் 12 ஆம் தேதி மாலை சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் இருந்து சுரேஷ் சலே விதித்துள்ள நிபந்தனை : தவறின் உயிரை விடப்போவதாகவும் அச்சுறுத்தல் IBC Tamil
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan