நிறைமாத கர்ப்பிணிக்காக கீழே இறங்கி வந்த முதலமைச்சர் விஜய்
Vijay
By Fathima
மின்சாரத்துறைக்கு தெரிவான 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார்.
எரிசக்தி துறை சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 401 பேர் தேர்வு செய்யப்பட்டனர், இவர்களில் 383(உதவிப் பொறியாளர்கள்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் ஆவர்.
இவர்களுக்கு இன்று பணி நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
அவர்களில் அட்சயலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து ஆணையை வழங்கினார், இவரது இந்த செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan