முதலமைச்சர் விஜய் உரை: கடும் அமளி- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Vijay TVK
By Fathima Jun 23, 2026 05:34 AM GMT
Report

17வது சட்டப்பேரவையின் மூன்றாவது நாள் நிகழ்வு இன்று தொடங்கியது,

முதலமைச்சர் விஜய் உரையாற்றுகையில், தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

கருத்து வேறுபட்டாலும் மாநிலம் சார்ந்து ஒன்றிணைந்து பயணித்தால் நம் மாநிலம் முதன்மையாக இருக்கும்.

மக்கள் பணி செய்வது தான் அனைத்துகட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை, 1967, 1977 ஆகிய காலகட்டங்களை போன்று தவெக ஆட்சியும் முற்றிலும் சாமான்ய மக்களுக்கான ஆட்சி என தெரிவித்தார்.


மேலும் ஏதோ கூட்டத்தில் இருந்து நேரடியாக வந்து முதலமைச்சர் ஆகிவிடவில்லை, கடுமையான உழைப்பிற்கு பின்னர் தான் மேலே வந்துள்ளோம், மக்கள் நலனுக்காக தவெக அரசு முழு வீச்சில் தொடர்ந்து உழைக்கும்.

1990களில் ரசிகர் மன்றமாக இருந்த போதே மக்களுக்கு நன்மை செய்தோம் என பேசினார்.

தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, எக்காரணத்தை கொண்டும் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம், கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசை எதிர்ப்பது தவெகவின் கொள்கை அல்ல, தமிழக வெற்றி கழகம் மக்களுக்கான ஆட்சி.

பெண்கள் பாதுகாப்பிற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, கடந்த 9 மாதங்களாகவே சட்டம் ஒழுங்கி டிஜிபி இல்லாமல் இருந்தது, சட்டம் ஒழுங்கு தொடர்பில் என்ன ஆலோசனைகள் இருந்தாலும் கூறலாம், அவதூறு அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை தெரிவிக்க வேண்டும் என குறுக்கிட்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச சபையில் கடும் அமளி நிலவியது. தொடர்ந்து எதிர்கட்சி எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.