பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன?
சட்டசபையில் தண்ணீர் பாட்டில் குறித்து ஏற்பட்ட விவாதம் நகைச்சுவையை ஏற்படுத்தி முதல்வரை மட்டுமின்றி ஒட்டுமொத்த அரங்கமே சிரித்துள்ளது.
சட்டசபையில் சிரிப்பலை
தமிழக சட்டசபையில் இன்று இரண்டாவது நாளாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பரபரப்புக்கு மத்தியில் கலகலப்பு ஏற்பட்டுள்ளது.
தே.மு.தி.க பொதுச் செயலாளரான பிரேமலதா, முதல்வருக்கு தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். ஆளுநர் பேசிய தமிழ் குறித்து பேசுகையில், 37 தவறுகள் இருந்ததாக சுட்டிக்காட்டினார்.
இதற்கு சபாநாயகர் அவரை தலைவர்களின் பெயரை படிப்பதற்கு முயற்சித்தற்கு பாராட்டுங்கள்... இவ்வாறு பேச வேண்டாம் என்று கண்டித்தார்.

பின்பு பிரேமலதா சட்டசபையில் டம்ளரில் தண்ணீர் வைப்பது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். அதாவது முதல்வர் பிறந்தநாளில் வைக்கும் கோரிக்கை என்னவெனில், டம்ளரில் தண்ணீர் வைக்காமல் கண்ணாடி பாட்டிலில் வைத்தால், அவை பணியாளர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்கும் என்று கூறினார்.
இதனால் அரசுக்கு பெரிய செலவு இருக்காது என்று கூறியதும், உடனே சட்டென ஓபிஎஸ் எழுந்து, அண்ணியார் நல்ல கருத்தை வைத்துள்ளார். ஆனால் ஏற்க முடியாது.

ஏனெனில் கோபம் வந்தால் தண்ணீர் பாட்டில் கொண்டு எரிய வாய்ப்புள்ளதாக கூறியது அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பிரேமலதா தண்ணீர் பாட்டில் தான் வீச வேண்டும் என்று இல்லை டம்ளரை கூடி வீசியடிக்கலாம் என்று கூறிய போது தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, ஓ.பி.எஸ்-ஐ பார்த்து ஒருவேளை அவரது தனிப்பட்ட அனுபவத்தின் காரணமாக இங்கு குறிப்பிடுகிறாரா என்று அறியவிரும்புவதாக கூறினார்.

இதில் சபாநாயகர், முதல்வர், எதிர்கட்சி உறுப்பினர்கள், அனைத்து அமைச்சர்கள் என குலுங்கி குலுங்கி சிரித்துள்ளனர். இன்று முதல்வர் விஜய் பிறந்தநாள் என்பதால் அன்று சிரிக்க வைத்தற்கு நன்றி என்று ரசிகர்கள், தொண்டர்கள் அண்ணியார் பிரேமலதாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.