இதுவரை ஊழலே செய்ததில்லை என்று சொல்ல முடியுமா? முதல்வர் விஜய் கேள்வி
cm vijay slams dmk in maduranthakam bye election campaign: இதுவரை ஊழலே செய்ததில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா என திமுகவிற்கு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் பிரச்சாரம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், மதுராந்தக இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இதில் பேசிய அவர், "நான் முதலமைச்சராக இங்க வரல இடைத்தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கேன் எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா, உங்க வீட்டு மகனா, உங்க வீட்டு தம்பியா வந்திருக்கேன். எப்போது பார்த்தாலும் ஸ்டாலினை பற்றியே பேசுறீங்க என்று சொல்கிறார்கள்.

ஜெயித்தாலும், தோற்றாலும் அவர் தான் என் அங்கிள். ஸ்வீட் அங்கிள். இருவருக்குத்தான் போட்டி. ஒன்று தூய சக்தி தவெக,மற்றொன்று தீய சக்தி திமுக.
ஏன் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? உங்கள் தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா?
தனிக்கட்சியாக, சாமானியர்களின் கட்சியாக, பெண்களின் பேராதரவோடு, குடும்பங்களின் பேராதரவோடு, பெண்களின் பாதுகாப்பிற்காக, போதைப்பொருளை ஒழிக்க, ரொம்ப முக்கியமாக, லஞ்சத்தை ஒழிக்க, ஊழலை ஒழிக்க ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?
அன்றைய ஜெயலலிதாவை இதே ஸ்டாலின் சார் தான் அவதூறாகப் பேசிய வீடியோ இன்றைக்கும் வைரலாகச் சென்றுக் கொண்டிருக்கிறது. அவர் மட்டுமல்ல, அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அப்படி தான் பேசுகிறார்கள்.
இப்படி திமுக ஒருபக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இதற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பது யார் தெரியுமா மற்றும் பலர். மற்றும் பலர் என்றால் யார் தெரியுமா? அதிமுக தான்.

ஜெயலலிதாவையே தவறாகப் பேசியவர்களுடன் ஒன்றாக இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று ஐடியா செய்தபோது இந்த மற்றும் பலருடைய அந்த திட்டம் எல்லாம் தெரிந்துவிட்டது.
‘திக் ஸ்கின்' என்று சொல்வார்கள், உலகத்தில் நான் மட்டும் தான் அதற்கு உதாரணம். 34 வருசமா எல்லாத்தையும் பார்த்துவிட்டு தான் வந்துள்ளேன். எனக்கு இது புதுசில்ல. எனக்கு இது பத்தல, நிறைய எதிர்பார்கிறேன் என்று தான் தோன்றுகிறது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து கணக்கு எவ்வளவு? அரசியலுக்கு வந்த பிறகு சொத்து கணக்கு எவ்வளவு காட்ட முடியுமா?
திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் சொல்லிக் கொள்கிறோம், ஊழல் செய்த கூட்டத்தை விடவே மாட்டோம். இனி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவும் முடியாது, ஏமாற்றவும் விடமாட்டோம்.
மக்கள் பணத்தைத் தொட்டதே இல்லை என்றும், மக்கள் பணத்தைத் தொடவே மாட்டோம் என்றும் உங்களால் சொல்ல முடியுமா?, இதுவரை ஊழலே செய்ததில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? ஊழலே செய்ய முடியாது என்று தான் சொல்ல முடியுமா?" என பேசினார்.