ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால்... முதல்வர் விஜய் பேச்சு
cm vijay says we have to control corruption: தவெக சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் நிகழ்வில், ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
தவெக கல்வி விருது விழா
தவெக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

2 ஆம் கட்ட கல்வி விருது விழா, சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு விருது மற்றும் உதவித்தொகை வழங்குகிறார் முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய் பேச்சு
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான நண்பா நண்பீஸ்க்கும், பெற்றோருக்கும் எனது வணக்கம்; நான் பேசுவதை அரசியலாக்க முயற்சிப்பர், அதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், உங்களிடம் இது குறித்து சொல்லியே ஆக வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது எல்லாம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஊழல் என்பது மிக பழமையானதுதான். ஆனால், மக்கள் அதனை பழகிவிட்டார்கள் என கடந்து விடக்கூடாது. ஊழல் ஒரு chronic disease.
அதனை சரி செய்ய முடியுமா என கேட்பார்கள். ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றால், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாகத்தான் இங்கு சிலரின் அடிமானமே ஆடி போயிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த ஊழல் குறித்து எல்லோரும் கேள்விபட்டிருப்பீர்கள். மற்ற துறைகளில் ஊழல் என்றால் கூட பரவாயில்லை, ஆனால் கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி ஏற்பது? எல்லா துறையும் முக்கியம்தான். எல்லா துறையும் நம்ம துறைதான், எந்த துறையில் தப்பு நடந்தாலும் தப்பு தப்புதான்.
பள்ளிகளின் பாதுகாப்பில் கூட ஊழல் செய்வதா? பள்ளிகளின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடி உள்ளனர், கும்பகோணம் பள்ளி தீவிபத்தை நினைத்தால் மனது பதறுகிறது.
புத்தகங்கள் உள்ள நூலகங்கள் அறிவுலகமா இல்லை ஊழல் உலகமா என எனக்கு தெரியவில்லை மற்ற நூலகங்களில் என்னென்ன நடந்திருக்குமோ? ஒன்று ஒன்றாகத்தான் வெளியில் வரும்.
உங்கள் வாழ்க்கையையே பாதிக்கும் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது, அதை பார்த்துக்கொண்டு எப்படி சும்மா இருக்க முடியும்? உங்கள் அண்ணனாகிய நான் உங்களை எப்போதும் நல்ல வழியில் தான் நடத்தி செல்வேன்" என தெரிவித்துள்ளார்.