திமுகவை தில்லாக எதிர்ப்பது நாம் மட்டும்தான் - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு

Vijay DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Sep 30, 2026 12:16 PM GMT
Report

cm vijay says we only oppose dmk like jayalalitha: எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் திமுகவை எதிர்ப்பது தில்லாக நாம் மட்டும்தான் என விஜய் பேசியுள்ளார். 

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், "நாம் ஆட்சி அமைத்த குறுகிய காலகட்டத்திலேயே வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். 

திமுகவை தில்லாக எதிர்ப்பது நாம் மட்டும்தான் - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு | Cm Vijay Says We Only Oppose Dmk Like Jayalalitha

717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டு 2000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உருவாக்கபட்டுள்ளது. 

காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதல் 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. வரும் பொங்கல் முதல் இலவச சிலிண்டர் திட்டம் அமலுக்கு வர உள்ளது.

ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை வழங்கி வருகிறோம். 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பியதை மறந்து, இன்னும் நாங்கள் தான் முதலமைச்சர், நாம் தான் அதிகாரத்தில் இருக்கிறோம் என சிலர் நினைக்கிறார்கள்.

மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளோம். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம். மன்னர் ஆட்சி மனப்பான்மை நமக்கு கிடையாது.

கடவுள் நம்பிக்கை எங்களுக்கு உண்டு, யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்துமசுக்கும், பக்ரீத்துக்கும் நாங்கள் வாழ்த்து சொல்வோம். 

திமுகவை தில்லாக எதிர்ப்பது நாம் மட்டும்தான் - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு | Cm Vijay Says We Only Oppose Dmk Like Jayalalitha

எம்மதமும் நம் மதம் என்று சொல்லிதான் நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். மற்றவர்கள் போல் வெளி வேஷம் போட்டுக் கொண்டு பம்மிக் கொண்டு திமுக போல் இருக்க மாட்டோம். 

 திமுகவை தில்லாக எதிர்ப்பது 

அண்ணா காலத்தில் எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்ததாக திமுகவின் துரைமுருகன் பேசுகிறார். துரைமுருகன் கூறியது போல் எளியவர்களை நிறுத்தி தான் மன்னர்களை தோற்கடித்தது தவெக. திமுக தலைமையுடன் பொதுச் செயலாளருக்கு என்ன பிரச்சனையோ?

எம்ஜிஆர் யாரை எதிர்த்து கட்சி தொடஙகனார்? ஜெயலலிதா யாரை எதிர்த்து அரசியல் செய்தார்? இருவரும் எதிர்த்த திமுகவோடு கூட்டு வைக்க முயற்சித்ததால், அதிமுக தொண்டர்களுக்கு அது வேதனைதானே? 

திமுகவை தில்லாக எதிர்ப்பது நாம் மட்டும்தான் - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேச்சு | Cm Vijay Says We Only Oppose Dmk Like Jayalalitha

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி சத்தியபாமா, முறையாக ராஜினாமா செய்துவிட்டு வந்தார்; எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் தில்லாக திமுகவை எதிர்ப்பது நாம்தான். அது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என இடைத்தேர்தலுக்கு பின்னரும் அறிக்கை வரும் பாருங்கள்.

கொங்கு பகுதி மக்கள் சத்தியத்தின் பக்கம் இருப்பீர்கள், அதே போல இந்த தேர்தலில் நமது சத்தியபாமா பக்கம் இருங்கள் தவெக சார்பில் போட்டியிடும் சத்தியபாமாவிற்கு விசில் சின்னத்தில் வாக்களிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்" என பேசினார்.