பெண்களை தொந்தரவு செய்தால்... முதல்வர் விஜய் எச்சரிக்கை
பெண்களுக்கு எதிரான கொடுமையை சிறிதளவு கூட சகித்து கொள்ள முடியாது என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்,நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

பெண் காவலரும், சிங்கமும் உள்ளது போல் வடிவமைக்கப்பட்ட சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை லட்சினையை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் பின்னர் ரோந்து வாகனங்களை துவங்கி அதை தானே ஓட்டினார்.

முதல்வர் விஜய் பேச்சு
அதைத்தொடர்ந்து நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய், சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மனதிற்கு நெருக்கமான ஒன்று. நமது பாட்டி, அம்மா, அக்கா, தங்கை என ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறினேன்.
அதனை அரசியலுக்காக மட்டும் அல்லாமல், உணர்வுப்பூர்வமாகத்தான் கூறினேன். அதனை தற்போது நிறைவேற்றியுள்ளேன்.
பெண்களுக்கு எதிரான கொடுமையை சிறிதளவு கூட சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்டு மனம் பதறுகிறது.
இது சில மாதங்களுக்கு முன்னர் உருவான பிரச்சினை இல்லை. பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் பிரச்னை பெரிதானதற்கு காரணம். இதற்கு காரணம் யார் என்பதை நான் கூறி தெரியவேண்டும் என்பது இல்லை.
போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைதான். இது தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருளை வேரோடு அகற்ற வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு தொடர்புடையது மட்டும்தானா? இதில் தனிமனித ஒழுங்கும் சம்பந்தப்பட்டிருக்கிறது. தனிமனித ஒழுங்கு இருந்தால், சமூகம் தானாக மாறும. கட்டுப்பாட்டுடன், பொறுப்புடன் இருந்தால் பல பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
பெண்களை தொந்தரவு செய்துவிட்டு கடந்து போய்விடலாம் என்ற நினைப்பவர்களை நான் எச்சரிக்கிறேன். பெண்கள் மீது கொடுமைகள் இழைத்தால் இனி நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதே சமயம், இந்த வேகமான நடவடிக்கையில் நிரபராதிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை காவலர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதல்ல, பெண்களின் பாதுகாப்பும் முக்கியம். பெண்களுக்கான மரியாதையும், கண்ணியமும் அரசின் இலக்கு. பயம் இல்லாமல் பெண்கள் வாழ வேண்டும் என்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடைக்கு முதற்கட்டமாக ரூ.354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2,500 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக ட்ரோன் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்து அறிமுகப்படுத்தப்படும்" என பேசியுள்ளார்.
செம்மணியில் என்பு கூட்டிலிருந்து மீட்கப்பட்ட நாணய குற்றி :சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு IBC Tamil
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan