முதலமைச்சர் விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுவின் மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய்-க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மேலும் நீலாங்கரை இல்லத்தில் வசிப்பதற்கு உரிமை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீது கடந்த ஏப்ரல் 20ம் தேதி விசாரணை நடந்த நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது, இதனை தொடர்ந்து விசாரணை ஜூன் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
