கத்தார் தீ விபத்து.., உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

Vijay Tamil nadu Qatar TVK
By Yashini Jun 23, 2026 11:56 AM GMT
Report

கத்தாரின் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் உள்ள எரிவாயு விநியோக மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர இந்திய வெளியுறவுத் துறை மற்றும் கத்தாரிலுள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த பணிகளை விரைவுபடுத்த வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசுவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கத்தார் தீ விபத்து.., உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி | Cm Vijay Relief Cmprf On Qatar Gas Plant Explosion

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் +91 1800 309 3793

வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901